ஈரோடு: சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது உறவினர்கள் 28 பேருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து நேற்றிரவு சென்னையில் இருந்து இரண்டு வேனில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோட்டிலிருந்து 50 பயணிகளுடன் கோபி பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கவுந்தப்பாடி என்ற இடத்தில் சபரி மலை பக்தர்கள் சென்ற வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த பக்தர்கள் 8 பேர் காயமடைந்தனர்.