ஈரோடு:கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிறை கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததுள்ளது.
அதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை சோதனையிட்டபோது, கோயம்புத்தூர் கணபதியைச் சேர்ந்த கௌதம் (29) மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கணபதி சிங் (45) ஆகியோர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், மூன்று சிம் கார்டுகள் மற்றும் 3 பேட்டரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் கௌதம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 15 வழக்குகளுக்கு மேல் தொடர்புடைய நபர் என்பதும், கணபதி சிங்சித்தோடு மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குன்னூர் பேருந்து விபத்து! சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்!
அதைத்தொடர்ந்து, கெளதம் மற்றும் கணபதி சிங்கிடமிருந்து செல்போன் மற்றம் சிம்கார்டுகளை பறிமுதல் செய்த கண்காணிப்பாளர் சிவக்குமார், கோபி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாவட்ட சிறையில் இரண்டாம் நிலைக் காவலராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார்தான் கைதிகளுக்கு செல்போன் கொடுத்தார் என தெரிய வந்துள்ளது.
மேலும், சரவணக்குமார் பணிக்கு வரும் ஒவ்வொரு நாளும், செல்போனை கைதிகளுக்கு கொடுத்துவிட்டு பணி முடிந்த பிறகு செல்போனை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார். அதைத்தொடர்ந்து, கைதிகளுக்கு செல்போன், சிம்கார்டு, பேட்டரிகள் கொடுத்த இரண்டாம் நிலைக் காவலர் சரவணக்குமாரை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதில் மற்ற சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:Train Timing Changes : ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தெற்கு ரயில்வே கொடுத்த அப்டேட்!