ஈரோடு:நாடு முழுவதும் 76 வது சுததந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் சுதந்திர தினவிழா கொடியேற்று நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநிலத்தின் தொழில்துறை முதன்மைச்செயலாளராக பதவி வகிக்கும் பொ.அன்பழகன் பங்கேற்றார்.
இவரது சொந்த ஊரான அரியப்பம்பாளையத்தில் அவருக்கு உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தேசிய கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், 'மகாராஷ்டிராவில் உயர்பதவில் இருந்தாலும் சொந்த ஊர் சுதந்திர தினவிழாவில் பங்கேற்று பெருமையாக கருதுகிறேன்.
சொந்த ஊரில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர தொழில்துறை முதன்மைச்செயலாளர் சத்தியமங்கலம் அரசுப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் படித்தேன். தமிழ் மொழியில் மட்டுமே சிந்திக்க முடியும். அறிவு செறிவூட்ட இயலும். தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளும் அவசியம். பிறருடன் தொடர்புகொள்ள பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். கூட்டாட்சி தத்துவம் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. ஆனால், வடமாநிலத்தில் தற்போது தான் பின்பற்றுகின்றனர்’ என்றார்.
தங்கள் கிராமத்தைச்சேர்ந்தவர் வெளிமாநிலத்தில் பெரிய பதவி வகித்தாலும் சொந்த கிராமத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்க வந்ததால் அவரைக் காண ஆர்வமுடன் மக்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:75 கிலோ கலர் பொடியில் பள்ளி மாணவர்கள் வரைந்த மகாத்மா காந்தி ஓவியம்