ஈரோடு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் 28 கோடி ரூபாய் செலவில் 416 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு அரசு பங்களிப்புடன் ரூ.1.50 லட்சம் என்ற குறைந்த விலையில் வழங்கப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.
அதேநேரம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமானம் இன்று வரை நிறைவடையவில்லை. இதனால் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் வாடகை வீட்டில் வசிப்பதகாவும், கூலி வேலை கிடைக்காத நிலையில் இந்த வீடுகளை விரைவில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பயனாளிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.