தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரத்து குறைவால் விண்ணைத்தொடும் தக்காளி விலை!! - tomato prices increased

ஈரோடு நோதாஜி தினசரி காய்கறி சந்தையில் கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனை ஆன தக்காளி விலை, தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரத்து குறைவால் விண்ணைத்தொடும் தக்காளி விலை
வரத்து குறைவால் விண்ணைத்தொடும் தக்காளி விலை

By

Published : May 21, 2022, 6:33 PM IST

ஈரோடு: வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் வருகின்றன. சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வரத்து குறைவாகி வருவதால் நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ. 30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. கடந்த வாரம் ரூ .70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் இருந்து தக்காளி விளைச்சல் குறைந்ததால் தக்காளி வரவில்லை.

வரத்து குறைவால் விண்ணைத்தொடும் தக்காளி விலை

தற்போது வ.உ.சி மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து மட்டும் தக்காளி வரத்து உள்ளது. 15 டன் தக்காளி இருந்த இடத்தில் தற்போது வெறும் 4 டன் தக்காளி வரத்து மட்டுமே உள்ளதால் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் தக்காளி வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது.

இந்நிலையில் மீண்டும் இன்று நூறு ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. சுமாராக இருக்கும் தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details