ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கோபி பேருந்து நிலையம் முன் திருப்பூர் தொகுதியில் கூட்டணிக்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மீண்டும் தவறாகப்பேசி சர்ச்சையில் சிக்கிய பிரேமலதா! - ஈரோடு
ஈரோடு: திருப்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் குறித்து தவறான தகவலை வெளியிட்டு தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அப்போது பிரேமலதா பேசுகையில், தற்போது திருப்பூர் மக்களவைத் தொகுதியில் எம்.பியாகஉள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தனை, மீண்டும் மக்கள் எம்.பியாக தேர்தெடுக்க வாக்களிக்க வேண்டும் என்றார். ஆனால், அந்த தொகுதியில் அதிமுகவின் சத்தியபாமா என்பவர்தான் தற்போது எம்.பியாக இருக்கிறார். இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, புல்வமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என தவறாக பேசி பிரேமலதா சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் தவறாகப்பேசி அரசியல் நோக்கர்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.