சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அத்தியூர் மலைப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி சடையம்மாள் (19). இவர்கள் வசிக்கும் அத்தியூர் கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத நிலையில் நிறைமாத கர்ப்பிணி சடையம்மாளுக்கு அதிக வலி ஏற்பட்டது.
ஆம்புலன்ஸில் பிரசவம்
இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியான சடையம்மாளை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு, கடம்பூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, செங்காடு என்ற இடத்தில் வலி அதிகமாகியதால் மருத்துவ உதவியாளர் ராமன், ஓட்டுநர் சங்கர் பிரசவம் பார்த்தனர். அவருக்கு நல்ல நிலையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அதே ஆம்புலன்ஸில் தாயும், குழந்தையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வழிமறித்த காட்டெருமைக் கூட்டம்
அப்போது ஆம்புலன்ஸுடன் பெண்ணின் உறவினர் மூன்று பேர் பைக்கில் சென்றனர். போன்பாறை என்ற இடத்தில் வழிமறித்து நின்ற காட்டெருமைக் கூட்டம், பைக்கில் சென்றவர்களைத் தாக்க முயன்றது. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸை நிறுத்தி அவர்களைக் காப்பாற்றினார்.
கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் சுகப்பிரசவம் மேலும் அவர்களை காட்டெருமை தாக்காதபடி ஆம்புலன்ஸ் ஓரமாக அழைத்துவந்தனர். காட்டெருமை வழிமறித்து நின்றதால் ஒரு மணி நேரத்துக்குப் பின் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.