ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், ராசாம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இதில் 25 ஆயிரம் தறிகளில் தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை, 15 ஆயிரம் தறிகளில் காட்டன் ரகங்கள், 10 ஆயிரம் தறிகளில் ரையான் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
துணிகள் தேக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மீட்டர் ரையான் துணி, தற்போது 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் மீட்டருக்கு நான்கு ரூபாய்வரை தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்பது விசைத்தறி உரிமையாளர்களின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக ஈரோட்டில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான ரையான் துணி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன.
- ரையான் துணி ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரையான் துணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்