ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விசைத்தறி உரிமையாளர் கனகராஜ். இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நிலையில்லாத நூல் விலையால் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் மீட்டர் துணிகள் தேக்கமடைந்துள்ளன. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்வதாகவும் தனது இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.