தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகளில் பொரிக்கு என்று தனி இடம் உண்டு. தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்பட்டுவருகின்றது.
ஆயுத பூஜையை சிறு, குறு நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் கொண்டாடுவர். இந்நிலையில், கரோனா பரவலினால் தொழிற்துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தாண்டு ஆயதபூஜை விமர்சையாக நடைபெறுமா? என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இது பொரி உற்பத்தியை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பேரிடியாக விழுந்துள்ளது.
ஈரோடு அருகேயுள்ள சூளைப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக அடுப்புக்கள் வைத்து பாரம்பரிய முறையில் பொரி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். முன்னர், அடுப்பும் மூலம் பொரி தயாரிக்கும் போது 40 பேர் வேலையில் ஈடுபட்டனர். தற்போது அதற்கென இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதால் இரண்டு பேர் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தயாரிப்பு விலை குறைவு என்கிறார் உற்பத்தியாளர் ஆர்.ரங்கசாமி.