ஈரோடு: ஈரோட்டின் புஞ்சைபுளியம்பட்டியில் வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக, வாழைத்தார்கள் விற்பனையில் மந்தநிலை காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டி வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்று (செப்டம்பர் 9) இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன.