தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு மாவட்டம் முழுவதும் களைகட்டிய மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் - Cattle pongal is weeding all over Tamil Nadu

ஈரோட்டில் உழவுக்கும் உழவர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈரோடு முழுவதும் களைகட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
ஈரோடு முழுவதும் களைகட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

By

Published : Jan 16, 2023, 5:37 PM IST

ஈரோடு மாவட்டம் முழுவதும் களைகட்டிய மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

ஈரோடு:தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று(ஜன.16) மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் உழவர்களுடன் சேர்ந்து மாடுகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதர்கள் மறந்து விடக் கூடாது, உழைப்பை அங்கீகரித்து அவற்றை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியனை வழிபட்ட பிறகு அடுத்த நாள் மாடுகளுக்கு பிரத்யேகமாக கொண்டாடப்படுவது தான், மாட்டுப்பொங்கல்.

இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சுமை தூக்குபவர்கள் பயன்படுத்தும் நாட்டு மாடுகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்று மாடுகளை தூய்மைப்படுத்தி, மாடுகளின் கொம்புகளுக்கு புதிய வர்ணம் பூசி, மாடுகளுக்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை தாக்கியதில் வீரர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details