ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்களின் கைகளில் வைக்கும் மை இல்லாததால் பத்து நிமிடம் வரை வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, தாளவாடி, டி.என். பாளையம், நம்பியூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது.
மொத்தம் 874 பதவியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலில் 2,760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 657 வாக்குசாவடிகளில் 70 வாக்குசாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.