தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி மலைப்பாதையில் சென்ற18 சக்கர லாரி: பறிமுதல் செய்த காவல் துறை! - 18 சக்கர லாரியை பறிமுதல் செய்த காவல் துறை

ஈரோடு: சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் அனுமதியின்றி சென்ற  18 சக்கர லாரியை பண்ணாரி சோதனைச்சாவடி காவல் துறையினர் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஒப்படைத்தனர்.

18 wheeler lorry that went up the hill without permission: Police seize it!
லாரியை பறிமுதல் செய்த காவல் துறை

By

Published : Oct 29, 2020, 6:55 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றும் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைகிறது. இதனால், திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர சரக்கு லாரி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. 14, 16 மற்றும் 18 சக்கர லாரிகளுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இது தவிர, அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை கட்டுப்படுத்துவதற்கு பண்ணாரி மற்றும் காராப்பள்ளம் சோதனைச்சாவடியில் உயரத்தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மைசூரிலிருந்து அன்னூருக்கு தேங்காய் மட்டை பாரம் ஏற்றிச் சென்ற 18 சக்கர லாரி திம்பம் வழியாக பண்ணாரி சோதனைச்சாவடி வந்தது. லாரியை ஓட்டுநர் திலீப் ஓட்டி வந்தார்.

அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பண்ணாரி சோதனைச்சாவடி காவல் துறையினர் லாரியை சோதனையிட்டபோது அனுமதியில்லாத 18 சக்கர லாரி என்பது தெரியவந்தது.

இந்த லாரியை பண்ணாரி சோதனைச்சாவடி காவல் துறையினர் பறிமுதல் செய்து பண்ணாரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details