கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் அதிகரிப்பின் காரணமாக ஜூன் 24ஆம் தேதிமுதல் ஜூன் 30ஆம் தேதிவரை வெளிமாவட்டங்களுக்கு கார், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
அதனடிப்படையில் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஈரோடு-கோயம்புத்தூர் மாவட்ட எல்லை பெரிய கள்ளிப்பட்டி சோதனைச்சாவடியில் காவல் துறையினர், மருத்துவக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் காவல் துறையினர் இ-பாஸ் இல்லாமல் வரும் கார்கள், இருசக்கர வாகனங்களை வந்த வழியே திருப்பி அனுப்பிவருகின்றனர். மேலும் அவர்கள் உரிய அனுமதியின்றி யாரும் வரக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பிவருகின்றனர்.
இதையும் படிங்க:நாளை முதல் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு :அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!