தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊரடங்குல வீட்டுல குளிக்க மாட்டோம் ஆத்துலதான் குளிப்போம்' - இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் துறை! - police punish 10 youngsters not obey Janata curfew

ஈரோடு: பவானி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர்களை பிடித்து காவல் துறையினர் தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனையை அளித்தனர்.

dsd
sds

By

Published : Mar 27, 2020, 7:27 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாடாமல் பாதுகாக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தியவாசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவியார்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் 10 பேர் ஒன்றாக செல்வதை காவல் துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் ஆற்றில் குளிக்க சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் துறை

இதைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக அனைவரையும் தோப்புக்கரணம் போட வைத்து காவல் துறையினர் தண்டனை வழங்கினர்.

இதையும் படிங்க:கரோனா வைரஸுக்காக ஒடிசாவில் தயாராகும் பிரத்யேக மருத்துவமனை

ABOUT THE AUTHOR

...view details