தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு உதவி ஆய்வாளரின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் - பணம் பறிக்க முயன்றவருக்கு வலைவீச்சு!

ஈரோடு: சத்தியமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்து பணம் பறிக்க முயன்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் பக்கம் ஹேக்
ஃபேஸ்புக் பக்கம் ஹேக்

By

Published : Oct 12, 2020, 10:43 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலக சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், கந்தசாமி. இவர் ஃபேஸ்புக் பிரியர் என்பதால் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், முகப்புப்படமாக வைத்துள்ளார்.

இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஃபேஸ்புக் ஹேக்கர் ஒருவர், அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்துள்ளார். இதையடுத்து அவரைப்பின் தொடரும் நண்பர்களிடமிருந்து பண உதவி கேட்டு தகவல்களைப்பதிவிடுகின்றார். இதைப் பார்த்த நண்பர்கள் கந்தசாமி விபத்தில் சிக்கி இருக்கலாம் எனக் கருதி, அவருக்குப் பணம் வழங்க முன் வருகின்றனர்.

ஃபேஸ்புக் பக்கம் ஹேக்

ஒரு கட்டத்தில் தனக்கு 20 ஆயிரம் ரூபாயை கூகுல் பேவில்(google pay) அனுப்புமாறு ஹேக்கர் பதிவிட, போன் எண்ணை நண்பர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து ஹேக்கர் கொடுத்த போன் நம்பர் கந்தசாமி எண் போல் இல்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள், உதவி ஆய்வாளர் கந்தசாமியிடம் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டனர்.

அப்போது கந்தசாமி பணம் கேட்கவில்லை என்றும், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதால் பணம் கேட்பவர்களிடம் பணம் தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். அவர் நண்பர்களுக்கு தகவல் பரிமாறுவதற்குள் 90 பேருக்கு ஹேக்கர் தகவல் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பணம் பறிக்கும் ஹேக்கர் கும்பலை பிடிக்குமாறு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க:மதுபோதையில் தகராறு - கல்லால் அடித்து கூலித்தொழிலாளி கொலை

ABOUT THE AUTHOR

...view details