தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் உண்டியலை உடைத்தவர்களுக்கு காவல் துறையினர் வலை வீச்சு - erode district news

ஈரோடு: முத்தம்பாளையத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

உண்டியலை உடைக்கும் கொள்ளையர்கள்

By

Published : Sep 25, 2019, 6:39 PM IST

ஈரோடு மாவட்டம், முத்தம்பாளையம் கிராமத்தில் தம்பிக்கலை ஐயன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்றிரவு நுழைந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் கோயிலை திறக்க பூசாரி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலில் இருந்த பணம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்டியலை உடைக்கும் கொள்ளையர்கள்

ABOUT THE AUTHOR

...view details