ஈரோடு:பவானி அடுத்துள்ள சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் திருச்சி பெரியார் நகர் பகுதியைச்சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் வர்ஷா மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். கல்லூரியில் தனி விடுதியில் தங்கி வரும் வர்ஷா நேற்று (செப். 15) இரவு உணவு சாப்பிட்ட பிறகு அறைக்கு வந்த அவர் திடீரென கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் முருகேசனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு ஈரோடு மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணேஸ்வரி, பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொன்னம்மா ஆகியோர் சென்று வர்ஷா தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர்.