ஈரோடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் திரியும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மார்க்கெட், காளைமாடு நிறுத்தம் என அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.