ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்நது திருடப்பட்டு வந்தன.
இதையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கருங்கல்பாளையம் அருகே இருசக்கர வாகனங்களை திருட முயற்சி செய்த ஏழு இளைஞர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான எட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த முஹம்மது நியாரி, விக்னேஸ்வர், கோடீஸ்வரன், பிரவீண், அஜ்மீர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஏழு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது திருடப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.