ஈரோடு:சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவருக்கு ஈரோடு அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில், சொந்தமான நிலம் உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, கண்ணம்மாள் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஈரோடு ராஜீவ் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மூர்த்திக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கிடையே மூர்த்தி, கண்ணம்மாளுக்கு சொந்தமான மற்றொரு ஒரு ஏக்கர் நிலத்தையும் ஆள் மாறாட்டம் செய்து அவரது பெயருக்கு கிரையம் செய்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கண்ணம்மாள் தனக்கு சொந்தமாக மீதம் உள்ள நிலம் தொடர்பாக வில்லங்க சான்றிதழ் பெற்றுள்ளார். அதில், மூர்த்திக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலம் போக, மேலும் ஒரு ஏக்கர் நிலம் மூர்த்தி பெயரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.