தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானையைக் கொன்று தந்தம் திருடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஈரோடு: கடம்பூர் வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் திருடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

யானை

By

Published : Jun 2, 2019, 7:51 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி மலை கிராமங்களில் விளை பயிர்களை பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் யானை இறந்து கிடப்பதாக கடம்பூர் வனச்சரகர் ருத்ரசாமிக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அங்கு ஆண் யானை ஒன்று தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானையை, அடையாளம் தெரியாத நபர்கள் மின்சாரம் பாய்ச்சிக் கொன்று தந்தத்தை வெட்டியெடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது 20 வயது மதிக்கத்தக்க ஆண்யானை என்றும், உடற்கூறாய்விற்கு பின்னரே யானையின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதி பசுவனாபுரத்தில் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் தந்தம் கடத்தல் கும்பலால் யானைக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details