தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரதான அரசியல் தலைவர்களின் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அதுபோல தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பது வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகள் செய்வது என தேர்தல் அலுவலர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
பயப்படாதீங்க மக்களே.. நாங்க இருக்கோம் - கோபி போலீசார் - police flag rally
ஈரோடு: மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றியும் பாதுகாப்புடனும் வாக்களிக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி சுதந்திரமான முறையில் வாக்குப்பதிவு செய்ய பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் கோபி உட்கோட்ட காவல்துறைக்குட்பட்ட கோபி கவுந்தப்பாடி சிறுவலூர் நம்பியூர் கடத்தூர் வரப்பாளையம் திங்கர் கடத்தூர் காவல்நிலைய ஆய்வாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வணிவகுப்பு நாயக்கன்காடு பகுதியல் தொடங்கி புதுப்பாளையம் பேருந்துநிலையம் பெரியார்திடல் கடைவீதி, கச்சேரிமேடு, கள்ளிப்பட்டி வழியாக சாந்தி திரையரங்கத்தில் முடிவடைந்தது.