தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈமு கோழிப்பண்ணை மோசடி - தம்பதி கைது

ஈரோட்டில் ஈமு கோழிப்பண்ணை அமைத்துத் தருவதாகக் கூறி சுமார் 200-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி பணம் மோசடி செய்த தம்பதியை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ஈமு கோழி பண்ணை மோசடி
ஈமு கோழி பண்ணை மோசடி

By

Published : Feb 11, 2022, 5:05 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முனியன் மாரியம்மாள் தம்பதியினர் 2012ஆம் ஆண்டு ஸ்ரீ நித்யா ஈமு, பவுல்டிரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஈமு கோழிப்பண்ணை அமைத்துத் தருவதாக விளம்பரம் செய்திருந்தனர்.

இதனை நம்பி 244 பேர் இவர்களிடம் பணம் செலுத்தியிருந்த நிலையில் ஈமு பண்ணைகள் அமைத்துத் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

மேலும், நாட்டுக்கோழி பண்ணை அமைத்துத் தருவதாகவும் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர். சுமார் மூன்று கோடியே 95 லட்சத்து 72 ஆயிரம் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முனியன், மாரியம்மாள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இன்று இதனை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ரவி முனியன், மாரியம்மாள் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரை விடுதலை செய்து அபராதத் தொகையை 222 முதலீட்டாளர்களுக்குத் திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்ததால் குண்டு வீசினேன் - பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் பகீர் வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details