தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் உண்டியல் உடைப்பு: பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்!

ஈரோடு: புதூர் பகுதி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற திருட்டு கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Police are investigating the persons who broke the temple bill.
கோயில் உண்டியல்

By

Published : Oct 20, 2020, 1:22 PM IST

ஈரோடு மாவட்டம் 46 புதூர் பகுதியில் பிரசத்தி பெற்ற முனியப்பன் கோயில் உள்ளது. கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக கோயில் பூட்டியிருந்தது. கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு (அக்.19) அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் உள்பகுதியிலுள்ள உண்டியலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.

உண்டியலில் பணம் இல்லாத காரணத்தால் திருட வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இன்று (அக்.20) காலையில் வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி உண்டியல் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details