ஈரோடு அடுத்துள்ள வில்லரசம்பட்டி அருகே தொட்டம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள, முனியப்பன் சாமி கோயிலில் நேற்று நள்ளிரவு (ஜன.25) தனியார் ‘ரெட் டாக்ஸி’ காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், மது போதையில் கோயிலில் முன்பு நடப்பட்டிருந்த வேல் அருவாள் உள்ளிட்ட கோயிலின் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
அதிகாலையில் கோயிலுக்கு வந்த பூசாரி மற்றும் பொதுமக்கள் கோயிலின் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, கோயிலில் பொருத்திருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், காரில் வந்த நபர்கள் கோயிலின் பொருட்களை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது.