தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.50 ஆயிரம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!

ஈரோடு: நகராட்சியில் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

By

Published : Dec 30, 2020, 4:15 PM IST

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இரண்டு வடமாநிலத்தவர்கள் நடத்திவரும் கடைகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தி உத்தரவின்பேரில், இந்த சோதனை நடைபெற்றது.

இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஆலையால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயம் - கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details