ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள மணிக்கூண்டை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 100-த்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் கொண்டுசேர்க்கப்படும். அந்தப் புத்தக வெளியீட்டை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது முதலமைச்சரின் ஆணைப்படி பள்ளிப்புத்தகங்களுக்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கைப்படி, இந்தாண்டு நாள்கள் குறைவாக உள்ளதால் புத்தகங்களின் பக்கங்கள் குறைக்க முதலமச்சரின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்க உத்தரவு