தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறையினர் அகற்றிய சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை! - Dedication of Bisil Mariamman statue

ஈரோடு : வனத்துறையினர் அகற்றிய பிசில் மாரியம்மன் சாமி சிலையை, மீண்டும் அதே வனப்பகுதியில் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

வனத்துறையினர் அகற்றிய சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை
வனத்துறையினர் அகற்றிய சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை

By

Published : Oct 19, 2020, 8:40 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள ஆசனூர் வனச்சரகம், அரேபாளையம் பிரிவு அருகே சாலையோர வனப்பகுதியில் பிசில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து பொதுமக்கள் வழிபடும்போது விலங்குகளால் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறிய வனத்துறையினர், கடந்த 14ஆம் தேதி இச்சிலையை அகற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கு ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தொடர்ந்து வனத்துறையினரைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என அரசியல் கட்சிகள், பழங்குடியின மக்கள் சங்கத்தினர் அறிவித்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில், வனத்தில் இருந்து அகற்றிய சிலையை மீண்டும் அதே பகுதியில் வைத்து வழிபட அனுமதி அளிக்குமாறு பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனின் உத்தரவின்பேரில், வனத்துறையினர் அகற்றி கொண்டு சென்ற பிசில் மாரியம்மன் சாமி சிலையை நேற்று (அக்.19) மீண்டும் பழங்குடியின மக்களிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் அகற்றிய சாமி சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை

அதனைத் தொடர்ந்து, சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, வனப்பகுதியில் ஏற்கனவே அச்சிலை இருந்த இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வனப்பகுதியில் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் கோபி, ஆர்டிஓ ஜெயராமன், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் முன்னிலையில் மீண்டும் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பழங்குடியின மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க:பிசில் மாரியம்மன் சிலையை அகற்றியது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை!

ABOUT THE AUTHOR

...view details