தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோபிசெட்டிபாளையத்தில் புறா பந்தயம் தொடக்கம் - புறா பந்தயம்

கோபிசெட்டிபாளையத்தில் 50-வது ஆண்டாக கலை நண்பர்கள் சார்பில் புறா பந்தயம் தொடங்கியது.

பண்டைய கால முறைப்படி புறா பந்தயம்
பண்டைய கால முறைப்படி புறா பந்தயம்

By

Published : Jul 3, 2022, 9:12 PM IST

ஈரோடு:கோபிசெட்டிபாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் கலை நண்பர்கள் சார்பில் புறா பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. வெற்றி பெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பண்டைய காலத்தில் புறாக்கள் கடிதங்களை பரிமாறும் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.

சரியான இடத்தில் இருந்து புறப்படும் புறா கடிதத்தை உரியவரிடம் சேர்த்து மீண்டும் அதே இடத்துக்கு வருவது இதன் சிறப்பு. புறாக்களின் செயலை வியந்து பாராட்டும் வகையில் புறாக்களை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆண்டிற்கான புறா பந்தயம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று தொடங்கியது.

பண்டைய கால முறைப்படி புறா பந்தயம்

கிட்டத்தட்ட 50-வது ஆண்டாக கலை நண்பர்கள் சார்பில் நடைபெறும் போட்டியில் கோபி, அளுக்குளி, புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பந்தய புறாக்கள் கலந்து கொண்டுள்ளன. 6 வாரங்கள் நடைபெற உள்ள புறா பந்தயத்தில் குறிப்பிட்ட இலக்கை சென்றுவிட்டு மீண்டும் வரும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இதையும் படிங்க :மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் நர்வேகர் தேர்வு - அறிய வேண்டிய 10 பாயின்ட்ஸ்..!

ABOUT THE AUTHOR

...view details