ஈரோடு: பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் சுபத்ரா. நான்கு ஆண்டுகளுக்கு முன் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த சுப்ரதாஸ் என்பவரை காதலித்துள்ளார்.
பின்னர் பெற்றொருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தா சென்றுள்ளார். இந்நிலையில் சுபத்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சுப்ரதாஸ் வீட்டில் தன்னை அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை, சுபத்ரா பெற்றோருக்கு அனுப்பி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபத்ராவின் பெற்றோர் மகளை மீட்டுத்தருமாறு பெருந்துறை போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர்.