ஈரோடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவுகள் பிறக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துவருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச காய்கறிகள், முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.