உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் (ஜூலை 30) அறிவித்திருந்தார். இது குறித்து அனைத்து நாளிதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
முதலமைச்சரை அவமதித்த நாளிதழை எரிக்க முயன்ற தபெதிகவினர்!
ஈரோடு : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட நாளிதழை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இயங்கிவரும் பிரபல தினசரி நாளிதழ் ஒன்று முதலமைச்சரின் பெயரை பழனி என்றெழுதி செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பவரை மரியாதை குறைவாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் இன்று (ஆகஸ்ட் 1) ஈரோடு காளைமாடு சிலை முன்பு முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட அந்த நாளிதழை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அருகில் உள்ள சமூதாய கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.