இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் தலைமலை சேவா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் கூறியதாவது;
சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தது அனைவரது மனதிலும் ஆறாத வடுவாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என்ற நோக்கத்தோடு நாமக்கல் மாவட்டத்தின் தலைமலை சேவா டிரஸ்ட்டின் சார்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு செய்யப்பட்டது.
அதில் தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற முறையில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு எங்கு இருந்தாலும் அதன் தகவலை ஆதாரத்துடன் தலைமலை சேவா டிரஸ்டுக்கு தகவல் தரும் நபருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமும் அவருக்கு சமூக நலனிலே அக்கறை உள்ளவர் என்ற சான்றும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதனை பார்த்த அரியலூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் அங்கு இருக்கக் கூடிய ஆழ்துளைக் கிணறு ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பிவைத்து, 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பற்ற முறையில் சிறார் பள்ளிக்கு அருகிலேயே இருப்பதாக அதுகுறித்த தகவலையும் தெரிவித்திருந்தார்.