ஈரோடு:மக்களின் முக்கிய பொழுபோக்கு அம்சமாக பவானிசாகர் அணை பூங்கா உள்ளது. பவானிசாகர் அணையின் முன்பகுதியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அணைப்பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்டப் பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வசதிகள் உள்ளன.
இங்கு பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று விடுமுறை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பவானிசாகர் அணைப்பூங்காவிற்கு வந்தனர்.