தமிழ்நாட்டில் கரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுக்களின் வசதிக்காக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
நடமாடும் காய்கறி வாகனங்களின் தாமதத்தால் பொதுமக்கள் அவதி - காய்கறி வாகங்கள்
ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் நடமாடும் வாகனங்கள் மூலம் தாமதமாக தொடங்கப்பட்ட காய்கறி விற்பனையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தாமதமாக தொடங்கிய நடமாடும் காய்கறி வாகனம்: பொதுமக்கள் அவதி!
அதன்படி, ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நகராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இன்று (மே 24) காலை 11 மணிவரை வாகனங்களில் விற்பனை தொடங்கவில்லை.
மொத்தம் 18 வார்டுகளிலும் 14நடமாடும் வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காய்கறிகள் விற்பனை தாமதமாக தொடங்கப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.