தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோரம் சுற்றித்திரியும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் - erode news

சத்தியமங்கலம் ஆசனூர் அருகே சாலையோரம் சுற்றித்திரியும் சிறுத்தையைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சாலையோரம் சுற்றித்திறியும் சிறுத்தை  சிறுத்தை  சத்தியமங்கலம் வனப்பகுதி  cheetah near road  cheetah  people scared by seeing cheetah  people scared by seeing cheetah near road  erode news  erode latest news
சிறுத்தை

By

Published : Sep 5, 2021, 11:09 AM IST

ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் இருக்கின்றனர்.

இந்த விலங்குகள் அவ்வப்போது தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

சுற்றித்திறியும் சிறுத்தை

இன்று (செப்.5) காலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அசனூர் அருகே, சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.

சாலையோரம் சுற்றித்திறியும் சிறுத்தை

அதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனால் கேட்ட வான ஒலி, இரைச்சல் சத்தத்தால் சாலையோரம் தென்பட்ட சிறுத்தை, காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதனை தொந்தரவு செய்யக் கூடாது எனவும், வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: கரூரில் நல்லாசிரியர் விருதுக்கு பத்து ஆசிரியர்கள் தேர்வு..!

ABOUT THE AUTHOR

...view details