தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியாயவிலைக் கடையில் பயோமெட்ரிக் குளறுபடி: பொதுமக்கள் போராட்டம் - people protest against Bio metric issue in Erode

ஈரோடு: நியாயவிலைக் கடையில் பயோமெட்ரிக் முறையில் குளறுபடி ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

biometric
biometric

By

Published : Sep 22, 2020, 6:14 PM IST

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் குளறுபடிகளைத் தவிர்த்திடும் வகையில் இன்றுமுதல் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குடும்ப அட்டைதாரர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

அத்தியாவசியப் பொருள்களை வாங்க முதியவர் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதனிடையே குடும்ப அட்டைதாரர்கள் ரேகை வைக்கும் இயந்திரம் இயங்காமல்போனதால் நியாயவிலைக் கடை ஊழியர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் அதனைச் சரிசெய்திட முடியவில்லை.

இதனால் கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் தங்களுக்கு பயோமெட்ரிக் முறை வேண்டாம், வழக்கம்போல் பழைய முறையின்கீழ் அத்தியாவசியப் பொருள்களை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பயோமெட்ரிக் இயந்திரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வழக்கம்போல் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பழையமுறையில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம்செய்யப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details