இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதை குறிக்கும் வகையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும், ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மத வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.
அதன்காரணமாக சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், புதுவடவள்ளி, தாளவாடி பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறவில்லை என்பதோடு தேவாலயங்கள் திறக்கப்படவில்லை.