தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழும் மக்கள்: புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை - சாக்கடை கழிவுநீர் கால்வாய்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழும் மக்கள்: புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை!
உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழும் மக்கள்: புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை!

By

Published : Dec 18, 2020, 1:38 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது நஞ்சப்ப செட்டி புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். 1989ஆம் ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 25 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.

சேதமடைந்த வீடுகள்

தரமில்லாத கட்டுமான பணி, மழை காரணமாகத் தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து சேதம் அடைந்தன. இந்நிலையில், தற்போது வீட்டின் உள்புற மேற்கூரை பகுதிகள் காங்கிரீட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்துவருகின்றன. எந்த நேரத்தில் கான்கிரீட் பெயர்ந்து விழும் என்பதால், குழந்தைகள், முதியவர்கள் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாக்கடை கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பிடம் தற்பொழுது சேதமடைந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழும் மக்கள்: புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை!

மக்கள் கோரிக்கை:

சேதம் அடைந்துள்ள கட்டடம் இடிந்து விழுந்து பெரிய அசம்பாவிதம் நடைபெறும் முன்பே, மாநில அரசு உகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:இந்தியாவில் மாபெரும் போராட்டங்களை எதிர்கொண்ட சட்ட திருத்தங்கள்!

ABOUT THE AUTHOR

...view details