தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுமுறை என்பதால் பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

விடுமுறை தினமான இன்று (செப்.25) பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

விடுமுறை என்பதால் பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை என்பதால் பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

By

Published : Sep 25, 2022, 9:07 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வன பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று (செப்.25) விடுமுறை தினம் என்பதால் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் முன்பு உள்ள குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விடுமுறை என்பதால் பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விரதம் இருந்து பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கோயில் முன்பு நெய்தீபம் ஏற்றி பண்ணாரி அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாத உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஈரோடு ஐஆர்டிடி கல்லூரி மாணவி தூக்கிட்டுத்தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details