தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோறா? சோசியல் டிஸ்டன்ஸா?- நமக்கு சோறுதான்...! - ஊரடங்கு உத்தரவில் கூட்டமாக உணவு வாங்கிய மக்கள்

ஈரோடு: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏதுமின்றி, சத்தியமங்கலம் அம்மா உணவகத்தில் தனி நபர் இடைவெளியின்றி கூட்டமாக மக்கள் பலர் உணவு வாங்குவதால் நோய்த் தொற்று பரவும் வாய்ப்பு.

people deosnot obey social distance due to corona curfew  period
people deosnot obey social distance due to corona curfew period

By

Published : Apr 11, 2020, 2:00 PM IST

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாநிலம் முழுவதும் அம்மா உணவகங்கள் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உணவு வாங்குவதற்காகக் கூட்டமாக நின்றுள்ளனர். அவர்களின் செயலால் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மக்களிடம் கரோனா வைரஸ் தொற்று குறித்த போதிய விழிப்புணர்வு, தற்போது வரை ஏற்படவில்லை எனவும் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்று அரசு விதிமுறைகளை மீறி சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details