தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புன்செய் புளியம்பட்டியில் தெருநாய் தொல்லை.. கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை! - people demanded control of street dog

Punjai Puliampatti: ஈரோடு புன்செய் புளியம்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், தெருநாய்கள் மக்களை கடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை
புன்செய் புளியம்பட்டியில் தெருநாய் தொல்லை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 1:37 PM IST

ஈரோடு: ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள புன்செய் புளியம்பட்டியில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பேருந்து நிலையத்தில் நிற்கும் பயணிகளை தெருநாய்கள் துரத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. வீதியெங்கும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் திரியும் தெருநாய்களால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், டானாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (35). இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த நிலையில், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், நாயை அப்பகுதியிலிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

இதையும் படிங்க:“சங்கரய்யாவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த நாய் நான்கு சாலை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மாதம்பாளையம் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து சுப்புலட்சுமி (65) என்ற மூதாட்டியை கடித்துள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் 7க்கும் மேற்பட்ட நபர்களை தெருநாய் கடித்து குதறியுள்ளது. தெருநாய் கடியால் காயம்பட்ட அனைவரும் புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாலையில் சுற்றித் திரியும் நாய்கள் சிறுவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மாதங்களில் 15க்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்துள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடைகளை முறையாக செய்யாத காரணத்தினாலும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவக்கம்.. வானவேடிக்கையில் ஜொலித்த அண்ணாமலையார் கோயில்!

ABOUT THE AUTHOR

...view details