தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் விலை உயர்வு: சூடுபிடிக்கும் சைக்கிள் விற்பனை - சைக்கிள் விற்பனை

ஈரோட்டில் பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக அவதிப்படும் பொதுமக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்
சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்

By

Published : Jul 23, 2021, 7:08 AM IST

ஈரோடு:பெட்ரோல், டீசல் விலைநாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.

தினமும் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் வாகனத்திற்கு நாளொன்றுக்கு பெட்ரோல் நிரப்ப குறைந்தபட்சம் ரூ.100 செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சைக்கிள் விற்பனை

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சைக்கிளுக்கு மாறியுள்ளனர். தற்போது சைக்கிள்கள் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பெட்ரோல் விலை அதிகரிப்பால் புதிய சைக்கிள்கள் வாங்குவது, கிடப்பில் போடப்பட்டுள்ள பழைய சைக்கிள்களை மீண்டும் பழுது பார்த்து பயன்படுத்துவது போன்ற செயல்களில் வாகன ஓட்டிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள சைக்கிள் கடைகளில் புதிய சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளதோடு பழைய சைக்கிள் பழுது பார்க்கும் பணியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சாதாரண வகை சைக்கிள்கள் 4ஆயிரம் ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரையிலும், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் 8ஆயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரிக்கை

தற்போது சைக்கிளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக சைக்கிள்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் சைக்கிளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடு குறைக்க வேண்டும் என சைக்கிள் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்

நடுத்தர மக்கள் மட்டுமே சைக்கிள்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களும் சைக்கிள்கள் வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நல்ல உடற்பயிற்சி என்பதோடு சுற்றுப்புறச் சூழல் பேணி பாதுகாக்கப்படுவதாகவும் சைக்கிள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலையேற்றம்- மிதிவண்டியில் நாடாளுமன்றம் சென்ற எம்.பி.க்கள்!

ABOUT THE AUTHOR

...view details