ஈரோடு மாவட்டம் திருநகர் காலணியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுபானக் கடையை மூடக் கூடாது என வலியுறுத்தி கடையின் முன்பாக மது பிரியர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கடையைத் திறக்கக் கூடாது என அப்பகுதியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.
மதுக்கடைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரே இடத்தில் போராட்டம் இந்த மதுக்கடைக்கு வருபவர்கள் சாலையிலேயே அமர்ந்து அருந்துவதாகவும், குடியிருப்பு, பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை உள்ளதாகவும் எனவே இந்த கடையை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் காவல்துறையினர் மதுப்பிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: 'வாட்டர் பெல்' திட்டம் - ஊராட்சி பள்ளிகளில் அமல்!