தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழ்நாடு அரசானது ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே காய்கறி, பழம், பெட்ரோல், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கர்நாடகாவில் இருந்து வந்த லாரிகளை ஆய்வு செய்தனர்.