பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் வசிக்கும் நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மயில்கள் கூட்டம் கூட்டமாக பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள கரையில் நடமாடுவதோடு தனக்கு தேவையான புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன.
பவானிசாகர் அணையின் மேல்பகுதியில் தோகை விரித்து ஆடிய மயில் - Bhavani sagar dam
பவானிசாகர் அணை பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட சூழலில் மயில் தோகை விரித்து ஆடியது.
Peacock
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணை பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதோடு அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் மயில்கள் தோகை விரித்து உற்சாக நடனம் ஆடுகின்றன.
சமீபத்தில் பவானிசாகர் அணையின் மேல்பகுதியில் மயில் தோகை விரித்து ஆடியது. இந்த காட்சி காண்போர் கண்களை கவர்ந்தது. மயில் தோகை விரித்து ஆடும் காட்சி அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கண்டு ரசித்தனர்.