தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் வீட்டுமனை பட்டா! - ஈரோடு மாவட்டச் செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பவானி தொகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு குலுக்கல் முறையில் தலா 2 சென்ட் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

patta-certificate-for-vaccine-certificate-new-initiative-from-erode
தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா இலவசம்!

By

Published : Sep 19, 2021, 2:29 PM IST

ஈரோடு:இதுதொடர்பாக பவானி வட்டாட்சியர் நேற்று பேசுகையில், "தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமை மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பவானி தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில், குலுக்கல் முறையில் தடுப்பூசி செலுத்திய 10 பேருக்கு வீட்டுமனை வழங்கவுள்ளோம். மேலும், சிலருக்கு தங்க நாணயம், வெள்ளிக் குத்துவிளக்கு, வேட்டி சேலை உள்ளிட்டவைகளையும் வழங்கவுள்ளோம்.

கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களில், சிலருக்கு தங்க நாணயம் உள்ளிட்டவைகள் வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டன" என்றார்.

தடுப்பூசி செலுத்தும் ஆர்வத்தை அதிகரிக்க வருவாய்த் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை பவானி மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மெகா தடுப்பூசி முகாம் - இலக்கை கடந்து சாதனை

ABOUT THE AUTHOR

...view details