ஈரோடு : கோபிசெட்டிபாளையம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கல்லூரிகளிலும், இரண்டு பள்ளி விடுதிகளிலும் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் நாகர்பாளையதில் அமைத்துள்ள தனியார் பள்ளி விடுதியில் 150க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு முறையாக மருந்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும் அந்த விடுதியில் தகுந்த இடைவெளியின்றி படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வீடியோ வெளியிட்ட கரோனா நோயாளி இந்நிலையில், அங்குள்ள நோயாளி ஒருவர் கரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் மருத்துவர், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி 150க்கும் மேற்பட்டோர் தவித்து வருவதாக கூறி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் அழகு நிலையத்திற்கு சீல் வைத்த மாநகராட்சி அலுவலர்கள்